மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பில் இருந்த 20 வீடுகள் அகற்றம்
05-Sep-2025
தேனி: பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சுகதேவ் தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தெரு முழுவதையும், நிலஅளவைத்துறை வரைபடம் மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை குறியீடு செய்தனர். இப்பேரூராட்சியின் 8 வது வார்டு சுகதேவ் தெருவில் 119 வீடுகள் உள்ளன. இதில் 70 வீடுகள் தெருவை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், தெரு 400 மீ., நீளம், 3.50 மீ., அகலம் உள்ளதாகவும் தெரிவித்து, இதிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றி, சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும் என பேரூராட்சிக்கு கக்கன்ஜி காலனியில் வசிக்கும் இளையராஜா புகார் அளித்திருந்தார். இவருடன் 70 புகார்களும் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குறிப்பிட்ட 21 பேர் ஆக்கிரமிப்புக்களை தானாக அகற்ற வேண்டும். இல்லையெனில் ஆக்கிரமிப்புக்களை (செப்.24ல்) அகற்றி, அதற்கான தொகையை வசூலிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்நிலையில் வீரபாண்டி வி.ஏஓ., சிவக்குமாரி, சர்வேயர் முரளீதரன், பேரூராட்சி பில கலெக்டர் ஆகியோர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் சுகதேவ் தெருவிற்கு ஆக்கிரமிப்பு அகற்ற சென்றனர். அங்குள்ள பொது மக்கள், தெருவில் வசிக்கும் தி.மு.க.,வினர் குறிப்பிட்ட இடத்தில் ஆக்கிரமிப்புக்களை எடுக்காமல் தெருவில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் எடுக்க இன்ஸ்பெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. பின் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் வந்தவுடன் அவரிடம் கோரிக்கை வைத்த தெரு முழுவதும் ஆக்கிரமிப்புகள் குறித்து நிலஅளவைத்துறையின் வரைபடத்தின் படி ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு இடப்பட்டன. இப்பணிகள் காலை 11:40 மணிக்கு துவங்கி மாலை வரை நடந்தது.
05-Sep-2025