தேனி வாலிபருக்கு தமிழ்ச்சான்றோர் விருது
தேனி : தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்த ஹரிகரன். இவர் ஆரம்ப் கல்வியை தேனி மாவட்டத்திலும், பொறியியல் படிப்பை திண்டுக்கலிலும், முதுகலை வணிக மோலண்மை படிப்பை சென்னை பல்கலையில் படித்தார். தற்போது லண்டனில் பொறியாளராக பணிபுரிகிறார். இங்கிலாந்து பாராளுமன்றம் உலக அளவில் தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களை 24 நாடுகளில் இருந்து தேர்வு செய்து பாராட்டி சான்றிதழ் வழங்கியது. அதில் தமிழ் ஆர்வலரான ஹரிஹரன் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் தற்போது லண்டன் தமிழ்சங்கத்தில் நிர்வாகியாகவும் உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பெருமை உள்ளிட்டவற்றை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்து வருகிறார்.