உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க., வினர் மீது நில அபகரிப்பு புகார் : கலெக்டரிடம் மனு

அ.தி.மு.க., வினர் மீது நில அபகரிப்பு புகார் : கலெக்டரிடம் மனு

தேனி : போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, அ.தி.மு.க.,வினர் மீது தேனி கலெக்டரிடம் புகார் தரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணேசபுரத்தை சேர்ந்த தோகைதாசன் மற்றும் கிராமமக்கள் சார்பில் கலெக்டர் பழனிசாமியிடம் தந்துள்ள மனு: கனாய்பட்டியில் எங்களுக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்ட நிலங்கள் உள்ளது. மயிலை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமுத்தேவர், அம்மாபட்டி கிளை செயலாளர் அம்சு, கே.கே.புரம் முத்தையா, கோரையூத்து அ.தி.மு.க., செயலாளர் பரமன், துணை செயலாளர் பால்கண்ணன்ச ஆகியோர் அங்குள்ள மரங்களை வெட்டினர். தற்போது நாங்கள் அனுபவித்து வரும் நிலத்தையும், போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளனர். கலெக்டர் பழனிசாமி கூறுகையில்,'புகார் குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை