உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் தாமதம்

வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் தாமதம்

கம்பம் : தேனி வனக்கோட்டத்தில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை தடுக்க, ஆண்டுதோறும், வனவிலங்கு சரணாலயங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கணக்கெடுப்பு நடத்தி வனவிலங்குகள் எண்ணிக்கை அடிப்படையில் இது அறிவிக்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் குமுளியில் இருந்து கூடலூர், கம்பம், மேகமலை, ஹைவேவிஸ், சின்னமனூர் ரோட்டிற்கு கீழ் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் , வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் மான்கள், வரையாடுகள், காட்டுப்பன்றிகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடுகளை வழங்கும். இதற்கென வார்டன்கள், பணியாளர்கள் தனியாக நியமனம் செய்யப்படுவார்கள். பொதுமக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். வனவிலங்குகளுக்கு வசதிகள் செய்து தரப்படும். அறிவிப்பு வெளியாகி பல மாதங்களை கடந்தும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை