உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விளையாட்டு மைதானத்தில் புல்தரை கோரிக்கை

விளையாட்டு மைதானத்தில் புல்தரை கோரிக்கை

தேனி : தேனியில் மாவட்ட விளையாட்டு கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் டெர்ரி, செயலாளர் மகாராஜன், ஒருங்கிணைப்பாளர் சர்ச்சில்துரை முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். விளையாட்டு மைதானத்திற்கு வரும் வீரர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்ய வேண்டும். மைதானத்தில் புல் தரை அமைக்கவும், சுற்றிலும் மரக்கன்றுகள் நட வேண்டும். பழுதடைந்த உடற்பயிற்சி மையத்தை சீரமைக்கவும், நீச்சல் குளம் பணியை விரைவு படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை