உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப் பெரியாற்றின் கரைகள் உடைந்து தென்னந் தோப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்

முல்லைப் பெரியாற்றின் கரைகள் உடைந்து தென்னந் தோப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்

கம்பம்: முல்லைப் பெரியாற்றின் கரையோரங்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தென்னந்தோப்புகள், நெல் வயல்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது.மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி உள்ளது. முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடி வருகிறது.மேகமலை பகுதியில் பெய்த வரும் மழை காரணமாக வெளியேறும் வெள்ள நீர், சுருளியாறு மின் நிலையத்தில் மின்உற்பத்தி செய்த பின் வெளியேறும் தண்ணீர், கோசேந்திர ஒடை வழியாக வெளியேறும் வெள்ளம், காக்கில் சிக்கையன்பட்டி ஓடை தண்ணீர், வரட்டாறு வெள்ள நீர் என முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடி வருகிறது.இதனால் முல்லைப் பெரியாற்றின் கரைகள் கம்பத்தில் இருந்து வீரபாண்டி வரை பல இடங்களில் கரைகள் உடைந்து, வெள்ள நீர் அருகில் உள்ள தென்னந் தோப்புகள், நெல் வயல்களுக்குள் புகுந்துள்ளது. தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் டீசல் இன்ஜின்களை பயன்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !