உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பவித்ரோத்ஸவம் துவக்கம்

 பவித்ரோத்ஸவம் துவக்கம்

தேனி: தேனி ஒன்றியம் வயல்பட்டியில் உள்ள ஹனுமந்தராய சுவாமி சமேத ஸ்ரீராமச்சந்திர சுவாமி கோயிலில் பவித்ர மாலை சாற்றும் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு பவித்ர அதிவாஸ பூஜைகள் நடந்தன. இன்று பெருமாளுக்கு தீபாராதனைகள் நடக்க உள்ளன. தொடர்ந்து டிச.3ல் காலை 9:00 மணிக்கு திருமஞ்சன புறப்பாடு, தீர்த்தவாரி, காலை 11:00 மணிக்கு பவித்ர விஸர்ஜனம் சாற்றுதல் பிரசாதம் வழங்குதல் நடக்க உள்ளது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவும், டிச.4ல் டிச.5ல் மாலை 6:00 மணிக்கு வைகானஸ, பாஞ்சராத்திர தீப ஏற்றும் விழா விமர்சையாக நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஸ்ரீராமபுரம், வயல்பட்டி, சத்திரப்பட்டி பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி