உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெங்களூரூவில் இருந்து தேனி வந்த ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகள்

பெங்களூரூவில் இருந்து தேனி வந்த ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகள்

தேனி: பெங்களூரூ பெல் நிறுவனத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் 200, கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்) 150 கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. முதற்கட்டமாக மாவட்டங்களுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படுகின்றன. பெங்களூரூ பெல் நிறுவனத்தில் இருந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு 200 வி.வி., பேட் கருவிகள் (ஓட்டுப் பதிவு உறுதி செய்யும் கருவிகள்), 150 கண்ட்ரோல் யூனிட் கருவிகள் கொண்டு வரப்பட்டன. கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலையில் இயந்திரங்கள் அறையில் வைக்கப்பட்டன. அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பணியை தேர்தல் பிரிவு தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார்கள் ராஜா, செந்தில் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை