உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை வெட்டிய சிறுமி

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை வெட்டிய சிறுமி

மூணாறு,: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சொக்கநாடு எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் விக்னேஷ் 32. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாட்டி வீட்டிற்கு தமிழகம் ராஜபாளையத்தில் இருந்து 14 வயது சிறுமி வந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டினுள் அத்துமீறி நுழைந்த விக்னேஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தப்ப எண்ணிய சிறுமி கத்தியால் வெட்டினார். கையில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் தப்பி ஓடிவிட்டார். சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் தேடிய போது வீட்டின் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை