உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடைகளை சேதப்படுத்திய படையப்பா

கடைகளை சேதப்படுத்திய படையப்பா

மூணாறு: மூணாறு அருகே ரோட்டோரம் உள்ள நான்கு கடைகளை நள்ளிரவில் படையப்பா ஆண் காட்டு யானை சேதப்படுத்தியது. மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை, நயமக்காடு ஆகிய எஸ்டேட்களுக்கு இடையே நடமாடி வருகிறது. அந்த ரோட்டில் நேற்று முன்தினம் நடமாடிய படையப்பா நள்ளிரவு 12:30 மணிக்கு மூணாறில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பெரியவாரை எஸ்டேட் பகுதிக்கு வந்தது. அங்கு பாலம் அருகே ரோட்டோரம் உள்ள செந்தில், மணி, ரூபன், பவுலி ஆகியோரின் கடைகளை சேதப்படுத்தியதுடன் ரொட்டி, பன், மேகி உள்பட உணவு பொருட்களை தின்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையின் யானை தடுப்பு பிரிவினர் படையப்பாவை அருகில் உள்ள காட்டிற்குள் விரட்டினர். இதே பகுதியில் செப்.15ல் இரண்டு கடைகளை காட்டுயானைகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை