உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அபாயத்தில் இருந்த புளியமரம் மழையால் சாய்ந்தது

அபாயத்தில் இருந்த புளியமரம் மழையால் சாய்ந்தது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் தெப்பம்பட்டி கால்நடை மருந்தக கட்டடத்தில் புளிய மரம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள தெருவில் உள்ள புளிய மரம் சமீபத்தில் பெய்த மழையில் சாய்ந்தது. சாய்ந்த மரம் கால்நடை மருந்தக வளாக கட்டடத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் கட்டடம் இடிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. தினமும் பலரும் வந்து செல்லும் கால்நடை மருந்தக வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்றுவற்கான நடவடிக்கையை கால் நடைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை