உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு

தேனி,: மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை கலெக்டர் அலுவலத்தில் கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.தமிழகத்தில் பனை மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு துறைகளின் கூட்டு முயற்சியாக பனை விதைகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. பனை விதை நடவுப்பணி அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் நடந்து வருகிறது. பனை விதை நடவு பணி விபரத்தை உரிய புகைப்படத்துடன் Green Tamilnadu Mission என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் . மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என, கலெக்டர் தெரிவித்தார். தேனி எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலை வகித்தார். அதிக பனைவிதைகளை சேகரித்து வழங்கிய போடி சிலமலை பனைமுருகனுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், வேலுச்சாமிக்கு 2ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ் ஆகியோருக்கு 3ம் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி