உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

மூணாறு: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் இடையே மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளி இறந்தார். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே ரோடு விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி அடிமாலி அருகே 14ம் மைல் பகுதியில் பணிகள் நடக்கிறது. அங்கு மண் அள்ளும் இயந்திரம் மூலம் பணிகள் நடந்தது. அப்போது பின் நோக்கி வந்த இயந்திரத்தில் சிக்கி சூப்பர்வைசர் ஒடிசாவைச் சேர்ந்த ராகேஷ்குமார்நாத் 28, இறந்தார். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை