உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகை, பணம் திருட்டு

நகை, பணம் திருட்டு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடசாமி 50, உசிலம்பட்டி அருகே தனியார் கல்லூரியில் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவரது மனைவியும் கூலி வேலை செய்கிறார். மூன்று நாட்களுக்கு முன் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். மாலையில் வீட்டில் திரும்ப வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த இரண்டு பவுன் செயின், அரை பவுன் டாலர், ரூ.600 திருடு போய் இருந்தது. இது குறித்து வெங்கடசாமி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி