உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வட்டவடையில் தேசிய பூங்கா வனத்துறையினருக்கு நவீன ஆயுதம் கேரள அமைச்சர் தகவல்

வட்டவடையில் தேசிய பூங்கா வனத்துறையினருக்கு நவீன ஆயுதம் கேரள அமைச்சர் தகவல்

மூணாறு : வட்டவடையில் தேசிய பூங்கா அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறினர்.மூணாறில் அமைச்சர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை தலைமை செயலாளர் சாஜன்பீட்டர், கூடுதல் தலைமை சி.சி.எப்.,திரிவேதிபாபு, சி.சி.எப்., பென்னிச்சன் தாமஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். சந்தன மரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பு,வன நிலங்கள் தொடர்பான பிரச்னை, ஆக்கிரமிப்பு போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.அமைச்சர் கணேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: வட்டவடையில் 7 ஆயிரம் ஹெக்டர் நிலத்தில் நீலக்குறிஞ்சி தேசிய பூங்கா அமைப்பதற்கு தேவையான நிலங்களை, விவசாயிகள் பாதிக்கப்படாத நிலையில் கையகப்படுத்தப்படும்.இப்பணி மூன்று மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும். சந்தன மரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்படும்,'என்றார்.பழைய மூணாறு பகுதியில் கேரளா விளையாட்டு குழுக்கு சொந்தமான உயர்தர விளையாட்டு மைதானத்தையும், பயிற்சி மாணவர்கள் தங்கும் கட்டடத்தையும் ஆய்வு செய்தார். ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் ராஜமாணிக்கம் ஊராட்சி தலைவர் மணிமொழி உடன் சென்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி