உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பந்த்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பந்த்

மூணாறு : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடந்த 'பந்த்'தினால் மூணாறில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கேரளாவில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இடது சாரி கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய 'பந்த்' நடந்தது. சுற்றுலா பகுதியான மூணாறில் கடைகள் அடைக்கப்பட்டு, வாகனங்கள் ஓடவில்லை.அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாட்டுப்பட்டி, குண்டளை போன்ற அணைகளில் சுற்றுலா படகுகள் இயக்க வில்லை. அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. நேற்று பந்த் என்ற போதிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து ஓரளவுக்கு காணப்பட்டது.ஓ ட்டல்கள் முழுவதும் அடைக்கப்பட்டதால்,சுற்றுலா பயணிகள் உணவுக்காக திண்டாட நேரிட்டது.சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் போலீசாரின் கண் முன்னர் வழி மறிக்கப்பட்டு,அரை மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டு,பின்னர் விடுவிக்கப்பட்டனர்.இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ