உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் சப்ளை இல்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் சப்ளை இல்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

கூடலூர் : கூடலூர் 6வது வார்டில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.கிணற்று நீர், குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தியதால், இப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதித்தனர். இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் பலனில்லை. இந்நிலையில், பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சாக்கடை வடிகால் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் குடிநீர் மெயின்பைப் சேதமடைந்துள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் அதனை சீரமைத்து குடிநீர் சப்ளை வழங்கி விடுவதாகவும், நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குடிநீர் சப்ளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ