உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆவின் ஊழியர்கள் ஸ்டிரைக் பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்

ஆவின் ஊழியர்கள் ஸ்டிரைக் பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்

தேனி : தேனி ஆவின் ஊழியர்கள் ஸ்டிரைக் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது.தேனி ஆவின் ஊழியர்கள் 33 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில் ஆவின் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஊழியர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக கோர்ட்டில் தீர்ப்பு பெற்று வந்தால், அதனை எதிர்த்து அப்பீல் செய்யாமல் ஏற்றுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆவின் ஊழியர்கள் தங்கள் ஸ்டிரைக்கினை வாபஸ் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ