உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில்ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில்ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

கூடலூர்:கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. கேரளமாநில எல்லையோரத்தில் அமைந்துள்ளது கூடலூர். இரு மாநில எல்லையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. தினந்தோறும் கேரளாவில் இருந்து காய்கறிகள் வாங்க வரும் வாகனங்கள் கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இது தவிர, போக்குவரத்து நெரிசல் உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். காய்கறி மார்கெட் அருகே பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இப்பகுதியில் ஏற்பட்ட விபத்துகளால் மூன்று பேர் பலியானதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J. Vensuslaus
ஆக 11, 2025 23:28

ராஜண்ணா, பிஜேபி முகாமிற்குள் நுழைய மூட்டை முடிச்சுகளை கட்டிவிட்டார் போல் தெரிகிறது.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ