உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில ஜூடோ போட்டியில் தேனி பள்ளி மாணவிகள் சாதனை

மாநில ஜூடோ போட்டியில் தேனி பள்ளி மாணவிகள் சாதனை

கம்பம்: கன்னியாகுமரியில் பள்ளி கல்வித் துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டிகளில் தேனி மாவட்ட பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.கன்னியாகுமரியில் ஜூடோ போட்டிகள் ஜன.22, 23ல் நடந்தது. பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 950 மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி இத்திகா ரோஷிணி, பிளஸ் 1 மாணவி தேவதர்ஷினி தங்கப் பதக்கத்தையும், பிளஸ் 1 மாணவி நேபிகா பரணி வெள்ளி, 8 ம் வகுப்பு மாணவிகள் ஸ்வேதா, சஞ்சனா வெண்கல பதக்கங்களையும் பெற்றனர்.காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவிகள் அர்ச்சனா தங்கப் பதக்கம், பிரியா வெள்ளிப் பதக்கம் பெற்றனர். தேனி இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அட்சய லாவண்யா வெண்கலம், முத்து தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மெட்ரிக் பள்ளி மாணவி பிரன்னதி வெண்கல பதக்கம் பெற்றனர். சாதனை மாணவிகளை மாவட்ட ஜூடோ சங்க தலைவர் ரவி, செயலாளர் செல்லப் பாண்டியன், பயிற்சியாளர்கள் முரளி, மாதவன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ