உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பறிமுதல் ரூ. 85 ஆயிரம் அபராதம்

புகையிலை பறிமுதல் ரூ. 85 ஆயிரம் அபராதம்

போடி: போடி நகராட்சி, போடிமெட்டு பகுதி உணவு பொருட்கள் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மதன்குமார், மணிமாறன், சுரேஷ் கண்ணன், சக்தீஸ்வரன், ஜனகர் ஜோதிநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் போடி அசேன் உசேன் தெரு, போடி மெட்டு உளிட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிலோ பறிமுதல் செய்தனர். தலா ரூ.25 ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர். போடி காமராஜ் பஜார், பெரியாண்டவர் ஹைரோடு, அசேன் உசேன் தெரு உள்ளிட்ட பகுதியில் பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை