உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொள்முதல் நிலையம் திறக்காததால் டன் கணக்கில் நெல் குவித்து காவல்

கொள்முதல் நிலையம் திறக்காததால் டன் கணக்கில் நெல் குவித்து காவல்

பெரியகுளம்: வடுகபட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு தாமதமாகி வருவதால் திறந்த வெளியில் டன் கணக்கில் நெல்லை குவித்து விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர்.பெரியகுளம் அருகே வடுகபட்டி மலைமேல் முனியாண்டி கோயில் வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.தை மாதம் அறுவடை துவங்கும் என்பதால் பிப்., 1 ல் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். தற்போது தாமரைக்குளம் கண்மாய் புரவில் பல நுாறு ஏக்கரில் நெல் அறுவடை ஆவதால் தினமும் ஆயிரம் முதல் 1500 மூடை வரத்து இருக்கும். ஒவ்வொரு சீசனுக்கும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நெல்மமூடைகள் கொள்முதல் செய்யப்படும்.பாண்டியன், விவசாயி, வடுகபட்டி: மூன்று நாட்களுக்கு முன்பே நெல் அறுவடை துவங்கி 400 மூடைகள் அளவு நெல் கொட்டப்பட்டுள்ளது. என்னைப் போன்று ஏராளமான விவசாயிகள் நெல் கொட்டியுள்ளனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்காததால் இரவில் நெல் திருட்டை தடுக்க விவசாயிகள் காவல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, வங்கியில் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. இங்கு கொள்முதல் நிலையம் உடனே திறக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை