| ADDED : மார் 10, 2024 06:23 AM
கூடலுார், : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் நகராட்சி, ஊராட்சி பகுதியில் ஆமை வேகத்தில் நடந்து வந்த பல்வேறு வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்துள்ளது.நகராட்சி, ஊராட்சிகளில் ரோடு அமைப்பது, குடிநீர் வினியோகம், கழிப்பறை, ரேஷன் கடை கட்டடம் என பல வளர்ச்சிப் பணிகள் கடந்த சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இது போன்ற பணிகளை கணக்கெடுத்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல மாதங்களாக நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் முடிவுறாத வளர்ச்சிப் பணிகளை தாமதமின்றி முடிப்பதற்கு ஆளும் கட்சி அந்தந்த நகராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு அலர்ட் செய்துள்ளது. இதனால் பல இடங்களில் நிலுவையில் இருந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.