மேலும் செய்திகள்
காட்டு யானைகள் நடமாட்டம் தொழிலாளர்கள் கலக்கம்
08-Sep-2025
மூணாறு: நயமக்காடு எஸ்டேட் பகுதியில் காட்டினுள் உறங்கிய படையப்பா யானையை சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஆர்வமுடன் ரசித்தனர். மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். அதனை தேடிச் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது வழக்கம். தனக்கென தனி வழியில் செல்லும் வழக்கம் கொண்ட படையப்பா நேற்று அதிகாலை மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட்டில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நடமாடியது. அதன்பிறகு அதே பகுதியில் ஆற்றோரம் காலை 10:00 மணி வரை முகாமிட்ட யானையை மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பயணித்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர். பின்னர் ஆற்றை கடந்து சென்ற யானை காட்டிற்குள் நன்கு அயர்ந்து உறங்கியது. அதனை அறியாமல் படையப்பாவை பார்க்க வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் சென்ற நிலையில் சிலர் படையப்பாவை பார்த்தே ஆக வேண்டும் என உறுதியுடன் இருந்தனர். மூன்று மணி நேரம் உறங்கிய படையப்பா கண் விழித்து ஆற்றோரம் உள்ள தேயிலை தோட்டத்தில் நடமாடியது. அதனை பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்ததுடன் அலைபேசியில் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
08-Sep-2025