மேலும் செய்திகள்
கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
31-Mar-2025
பெரியகுளம்: கும்பக்கரை, சுருளி அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதால் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குளித்தனர். பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் கும்பக்கரை பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. ஏப்.4ல் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று மதியம் 2:30 மணி முதல் நேற்று முன்தினம் ஏப்.6 வரை வனத்துறை நிர்வாகம் குளிக்க தடை விதித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்தனர்.பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு செல்லும் ரோட்டில் குளிக்கஅனுமதியில்லை என அறிவிப்பு போர்டு வைக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரைக்கு சாரல் மழையில் நனைந்தபடி சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று அதிகாலை 5:00 மணி முதல் நீர் வரத்து கணக்கிடப்பட்டது, நீர் வரத்து சீரானதால் காலை 8:00 மணிக்கு குளிக்கஅனுமதிக்கப்பட்டனர். கொடைக்கானல் சென்று ஊருக்கு திரும்பும் சுற்றுலா பயணிகள் கோடைவெயிலில் கும்பக்கரை அருவியில் குளித்து விட்டு சென்றனர். தண்ணீரின் வேகம் இயல்பு நிலையை விட சற்று அதிகமாக உள்ளது.கம்பம்: மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் பகுதிகளில் பகலில் சாரலும், இரவில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக வறண்ட சுருளி அருவியில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்.
31-Mar-2025