உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

பெரியகுளம் : கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அவசரமாக வெறியேற்றப்பட்டனர்.பெரியகுளம் அருகே 8 கி.மீ., தூரம் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி பாம்பாற்புரம், வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரையில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. அக்., 20 ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குளிக்க தடையானது. இதனை தொடர்ந்து நீர் வரத்து சீரானதால் அக்.28 முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை 8:00 மணிக்கு அருவியில் குளிக்க துவங்கினர். காலை 8:45 மணிக்கு அருவி பகுதியில் சாரல் மழை பெய்ய துவங்கியது.சுற்றுலா பயணிகள் குளித்தனர். காலை 11:00 மணிக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது. இதனை கண்காணித்த வனத்துறையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாபயணிகளை அருவிப்பகுதி மற்றும் நீரோடை பகுதியில் இருந்து அவசரமாக கரையேறுமாறு வனத்துறை அறிவித்தது. மதியம் 12:00 மணிக்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கும்பக்கரை அருவி பகுதியிலும் மழை பெய்தது. தண்ணீர் வரத்து சீராகும் வரை ரேஞ்சர் அன்பழகன் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி