உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குண்டும் குழியுமான ரோடால் சிரமப்படும் சுற்றுலாப் பயணிகள்

குண்டும் குழியுமான ரோடால் சிரமப்படும் சுற்றுலாப் பயணிகள்

தேவதானப்பட்டி : மஞ்சளாறு அணைப் பகுதியில் ஒரு கி.மீ., துாரத்திற்கு ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுகின்றனர்.தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பிற்காக 55 அடி நீர் தேக்கப்படும். தற்போது அணை நிரம்பி பாசனத்திற்கு திறக்கப்பட்டது. தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் செல்கிறது.இதனால் இரு மாவட்டத்திலும் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நுாற்றுக்கணக்கான கிணறுகளுக்கு ஊற்று நீர் கிடைக்கிறது. 57 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மஞ்சளாறு அணையை சுற்றி பார்ப்பதற்கு மாதம் மூன்றாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பள்ளிக் கல்லுாரி மாணவர்கள் அணையின் நீர்த்தேக்கம் அழகு, மறுபுறம் பசுமையை ரசித்தபடி செல்கின்றனர். மஞ்சளாறு அணையின் நுழைவுப் பகுதியில் இருந்து 4 கண் மதகுகள் வரை ஒரு கிலோ மீட்டர் துாரம் உள்ளது. ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளதால் நடந்து சென்று ரசிப்பவர்கள் சிரமப்படுகின்றனர். டூவீலர், கார்கள் வரை நேராக ஓட்டி செல்ல முடியாது. இதனால் தலா 100 மீட்டர் துாரத்திற்கும், இடமிருந்து வலம், வலம் இருந்து இடம் என வாகனங்கள் மாறி செல்லும் அவல நிலை உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ரோடு முழுவதுமாக சேதமடைந்து உள்ளது. விரைவில் ரோடு அமைக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை