மேலும் செய்திகள்
டூவீலர்கள் மோதி ஒருவர் பலி
02-Sep-2025
கூடலுார்: சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் வனராஜ் 60. இவர் கூடலுார் மந்தை வாய்க்கால் அருகே பழக்கடை நடத்திவந்தார். நேற்று மதியம் டூவீலரில் கூடலுார் நோக்கி வரும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவரை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார். கூடலுார் தெற்கு போலீசார் விபத்து ஏற்படுத்திய டூவீலர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
02-Sep-2025