உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தந்தை மது பழக்கத்தால் மகன் பலியான சோகம்

தந்தை மது பழக்கத்தால் மகன் பலியான சோகம்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதி இருவர் பலியான விபத்தில், டிரைவர் சதாம் உசேன் மதுபோதையில் காரை ஓட்டி ஆட்டோவில் மோதியது தெரியவந்துள்ளது.கொடைக்கானல் அட்டுவம்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து 34. இவரது மனைவி லட்சுமி 26. மகன் பவின் பாண்டி 5. ஆகியோர் இவர்களது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் செல்வராணி என்பவரது தங்கைக்கு பழைய வத்தலகுண்டில் பிப். 22ல் திருமணத்திற்கு கொடைக்கானலில் இருந்து தனது நண்பர்கள் குடும்பத்துடன் காரில் வந்தனர். ஜி.கல்லுப்பட்டியில் லட்சுமியின் தோழி யாஸ்மின் வீட்டில் பிப்.21 இரவில் தங்கினர். பிப்.22ல் காலை 8:00 மணிக்கு திருமணத்திற்கு கிளம்பினர். காளிமுத்துவும், கார் டிரைவர் சதாம் உசேன் 27. மது போதையில் காரை இயக்க தயாரானார். இதை அறிந்த லட்சுமி, காரில் வரமறுத்து தனது மகன் பவின்பாண்டி, ராபியாபேகம், சபிகாபேகம், கீர்த்தனா, கதிஜா ஜாஸ்மின் ஆகியோருடன் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை ஜி.கல்லுப்பட்டி வினோபாநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அய்யனார் 54. ஓட்டினார். பரசுராமபுரம் அருகே முன்னால் சென்ற ஆட்டோ மீது மதுபோதையில் காரை ஓட்டிய சதாம்உசேன் அதிவேகமாக அஜாக்கிரதையாக சென்று ஆட்டோவில் மோதினார். இதில் ஆட்டோ டிரைவர் அய்யனார், பவின்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தந்தை காளிமுத்து மதுபோதை பழக்கத்தால் மகன் பவின்பாண்டி பலியானது அனைவரையும் கண்கலக்கச் செய்தது. மதுபோதை டிரைவர் சதாம்உசேனை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை