அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி
தேனி: அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேனி, மயிலாடும்பாறை, உத்தமபாளையம் பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிகள் பற்றி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரேவதி கூறியதாவது: உணவுகள் தயாரித்தல், உணவு தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், ஊட்டச்சத்து வழங்குதல், முன்பருவ கல்வி திட்டத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், அடிப்படை பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இது தவிர வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். இதுவரை மாவட்டத்தில் 3 பிரிவுகளாக 300 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற பணியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்க உள்ளோம் என்றார்.