உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  விவசாயிகளுக்கு பயிற்சி

 விவசாயிகளுக்கு பயிற்சி

தேனி: தேனி உழவர் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் விவசாயிகள், வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு, சுகாதாரமாக உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. வேளாண் விற்பனை துணை இயக்குநர் சுரேஷ் தலைமை வகித்தார். உணவுப் பாதுகாப்பு அலுவலர் லிங்கம் முன்னிலை வகித்தார். குப்பை மேலாண்மை, உணவுப் பொருட்களை சுகாதாரமாக வழங்குதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு இலவச தராசுகள் வழங்கப்பட்டன. பயிற்சி வகுப்பை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை