உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தை திருமணம் தடுப்பது தொடர்பாக பெண்களுக்கு பயிற்சி

குழந்தை திருமணம் தடுப்பது தொடர்பாக பெண்களுக்கு பயிற்சி

தேனி: போக்சோ, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், குழந்தை திருமணத்தை தடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக சமுதாய வளபயிற்றுனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.தேனி முல்லை நகரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகத்தில் சமுதாய வள பயிற்றுனர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜ் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.பயிற்சியில் பாலின பாகுபாடு, போக்சோ சட்டம், குடும்ப வன்முறை, வரதட்சனை, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஆலோசனைகள், சிறார் திருமணம், பணியிடங்களில் பாலியல் தொடர்பான பிரசனைகளை முறையிடுவது, ஆரோக்கிய உணவு, ஊட்டச்சத்துகள் உள்ளிட்டவை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் தேனி, கம்பம், மயிலாடும்பாறை, கம்பம், வட்டாரங்களைச் சேர்ந்த சமுதாய வள பயிற்றுனர்கள் பங்கேற்றனர். இவர்கள் மூலம் குறிப்பிட்ட வட்டாரங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட வள பயிற்றுனர் கவுரிமாலா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை