உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேக்கடியில் பழங்குடியினர் ஓணம் கொண்டாட்டம்

தேக்கடியில் பழங்குடியினர் ஓணம் கொண்டாட்டம்

கூடலுார்: கேரளாவில் முக்கிய திருவிழாக்களில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். பல வகை காய்கறிகளுடன் உணவு சமைத்து உறவினர்களை அழைத்து உணவு பரிமாறி கொண்டாடி மகிழ்வர். 10 நாட்களாக நடந்த ஓணம் பண்டிகையின் நிறைவு நாளான நேற்று திருவோணம் கொண்டாடப்பட்டது. இதில் ஒவ்வொரு வீடுகள், நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளில் அத்தப்பூ கோலம் போட்டு கொண்டாடினர். தேக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக ஸ்டார் ஓட்டல்களில் ஓணம் கொண்டாடப்பட்டது. பழங்குடியினருடன் கொண்டாட்டம் தேக்கடி மன்னார்குடி வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடன் சுருளிப்பட்டி அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குனர் அன்புராஜா தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடினர். 30 பழங்குடியின பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி