பெண்ணை தாக்கிய இருவர் கைது
பெரியகுளம்: பெரியகுளம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி ஈஸ்வரி 40. திருவிழாவில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம் 20. இவரது நண்பர் பிரகாஷ் 21. இடித்துச் சென்றனர். இது குறித்து கேட்ட ஈஸ்வரியை, இருவரும் தாக்கினர்.இதனை தட்டிக்கேட்ட ராஜேஷ்குமாரையும் தாக்கினர். ஈஸ்வரி, ராஜேஷ்குமார் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தென்கரை போலீசார் பிரகாஷை கைது செய்தார்.-