மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை
20-Jun-2025
தேனி : தேனியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் நாமக்கல் ராசிபுரம் மாரியப்பன் 42, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வேஹல்லி ராஜ்குமார் 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தேனி சோலை மலை அய்யனார் கோவில் தெரு முத்துகிருஷ்ணன் 53. எல்.ஐ.சி., முகவர். இவர் ஜூன் 12ல் ஆண்டிபட்டியில் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்று திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.3.97 லட்சம் மதிப்பிலான 13 பவுன் தங்க நகை, பணம் ரூ. 55 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. முத்துகிருஷ்ணன் புகாரில் தேனி போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்குமார், மாரியப்பன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9.5 பவுன் நகை, ஒரு கார், அலைபேசிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர். வழக்கில் தொடர்புடைய மேலும், சிலரை தேடி வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்த போது நண்பர்களாகி உள்ளனர். பழைய வழக்குகளின் செலவிற்காக கொள்ளை அடித்துள்ளனர். நகர் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டு உள்ள அதி நவீன சி.சி.டி.வி., கேமராக்கள் பதிவான வீடியோ பதிவுகள் மூலம் கைது செய்தோம்., என்றனர்.
20-Jun-2025