உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேளையாடு வேட்டை இருவர் கைது

கேளையாடு வேட்டை இருவர் கைது

மூணாறு : மூணாறு கல்லார் குருசுபாறையில் ஏலத்தோட்டத்தில் கண்ணி வைத்து கேளையாட்டை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.தனியார் ஏலத்தோட்டத்தில் தொழிலாளர்களான மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சோவித்லால் 35, தேவிலால் 38, ஆகியோர் வைத்த கண்ணியில் கேளையாடு சிக்கி பலியானது. அதன் இறைச்சியை இருவரும் சமைத்து உண்டனர். அச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தெரியவந்தது. தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி தலைமையில் வனக்காவலர்கள் இருவரையும் கைது செய்து கேளையாடு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை