மதுபாட்டில் விற்ற இருவர் கைது
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் 34. கைலாசபடாடி ஆர்ச் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அங்கு தென்கரை எஸ்.ஐ., கர்ணன் ,உதயகுமார் டூவீலரை சோதனையிட்டதில் 50 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். மதுபாட்டில்கள், டூவீலரை கைபற்றி உதயகுமாரை கைது செய்தார். பெரியகுளம் அருகே மேல்மங்கலம் , சத்யாநகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 45. தேவராத்தைச் சேர்ந்த இவரது நண்பர் சுதாகர் 40. இருவரும் ஜெயமங்கலம் குள்ளப்புரம் ரோட்டில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் 150 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். ஜெயமங்கலம் போலீசார் மது பாட்டில்களை கைப்பற்றி, சத்தியமூர்த்தியை கைது செய்தனர். சுதாகரை தேடி வருகின்றனர்.