மேலும் செய்திகள்
6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
13-Sep-2025
தேனி : வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது போடி காளியம்மன் கோயில் நந்தவனம் 2வது தெரு விஜயகிருஷ்ணன் 46, டூவீலரில் வந்தார். பின்னால் விஸ்வாசபுரம் தெற்குத்தெரு மணிகண்டன் 37, அமர்ந்திருந்தார். இவர்கள் ஒரு கருப்புப்பையில் சட்டவிரோத விற்பனைக்காக 6 கிலோ 710 கிராம் எடையுள்ள ரூ.5,584 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
13-Sep-2025