உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாரி, கார்களில் டீசல் திருடிய இருவர் கைது

லாரி, கார்களில் டீசல் திருடிய இருவர் கைது

தேனி:இரவில் ரோட்டோரம் நிறுத்தப்படும் லாரி, கார்களில் டீசல் திருட்டில் ஈடுபட்ட தேனி மாவட்டம் ஆண்டிபட்டி யோகேஷ் 20, பாப்பம்மாள்புரம் சஞ்சய்மகேஸ்வரன் 19, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர், எஸ்.ஐ., இளங்குமரன் தலைமையிலான போலீசார் அரண்மனைப்புதுார் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மினி சரக்கு வாகனத்தில் இருந்த பால் கேனில் டீசல் நெடி பரவியது. சந்தேகம் அடைந்து அதில் பயணித்த ஆண்டிபட்டி யோகேஷ், பாப்பம்மாள்புரம் சஞ்சய்மகேஸ்வரனை பிடித்து விசாரித்தனர். அதில் இருவரும் இணைந்து தேனி, பழனிசெட்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் இரவில் நிறுத்தப்படும் லாரிகள், கார்கள், வாகனங்களில் இருந்து ரூ.2.62 லட்சம் மதிப்புள்ள 2500 லிட்டர் டீசலை திருடி விற்றதாகவும், ரூ.8 லட்சம் மதிப்பில் சரக்கு வாகனத்தை திருடியதும் தெரிந்தது. திருடிய சரக்கு வாகனம், டூவீலரை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் கூறியதாவது: கைதான யோகேஷ் மீது தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 17 வழக்குகளும், சஞ்சய் மகேஷ்வரன் மீது7 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இருவரும் மதுரைவிளாச்சேரியில் உள்ள ஆதிசிவன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடியதை ஒப்புக் கொண்டனர். யோகேஷ் தான் ஒரு செய்தியாளர் எனபோலீஸ் வாகன தணிக்கையில் கூறி வந்துள்ளார். அவரது அடையாள அட்டை, வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் திருடிய டீசலை குறைந்த விலைக்கு விற்று, செலவு செய்து, பணம் தீர்ந்த பின், மீண்டும் அடுத்த திருட்டைதொடர்வது வாடிக்கையாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை