மேலும் செய்திகள்
மூன்று கிலோ கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட ஐவர் கைது
6 minutes ago
பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தம்
8 minutes ago
ஐயப்ப பக்தர்கள் பயன்பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு
8 minutes ago
மாணவர்கள் உடல்நல கருத்தரங்கு
8 minutes ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். உடன் பிளஸ் 1 படிக்கும் மாணவருடன் பழகி வந்தார். இருவரும் தனிமையில் இருந்ததை ராயவேலூரைச் சேர்ந்த பிச்சைமணி 52, புகைப்படம் எடுத்தார். அந்தப் படத்தை சிறுமியிடம் காட்டி, 'பிளாக் மெயில்' செய்து அவரை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியுடன் பழகி வந்த மாணவருக்கும் இந்த விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை பாதித்ததால், அவரை அவரது தாயார் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கூட்டிச் சென்றார். பரிசோதித்த டாக்டர், சிறுமி கருவுற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்து, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இது குறித்து சிறுமியின் தாயார் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணை செய்த போலீசார் பிச்சைமணி, சிறுவர் உள்ளிட்ட இருவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
6 minutes ago
8 minutes ago
8 minutes ago
8 minutes ago