உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு டவுன் பஸ்களில் இரு பெண் கண்டக்டர்கள் நியமனம்

அரசு டவுன் பஸ்களில் இரு பெண் கண்டக்டர்கள் நியமனம்

தேனி: மாவட்டத்தில் முதல் முறையாக அரசு டவுன் பஸ்களில் இரு பெண் கண்டக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயங்குகின்றன. அரசு, தனியார் பஸ்களில் இதுவரை ஆண்கள் மட்டுமே கண்டக்டர்கள், டிரைவர்களாக பணிபுரிந்தனர். சில மாவட்டங்களில் பெண்கள் கண்டக்டர்களாகவும், டிரைவர்களாகவும் பணிபுரிந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் 2 டவுன் பஸ்களில் பெண் கண்டக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதில் தேனி பழனிசெட்டிபட்டி சத்தியபிரியா, பெரியகுளத்தை சேர்ந்த நாகலட்சுமி ஆகிய 2 பெண்கள் பணியில் இணைந்துள்ளனர். மாவட்டத்தில் பெண் கண்டக்டர்கள் பணிபுரிவது இது முதல்முறையாகும். சத்தியபிரியா தேனியில் இருந்து ஆண்டிபட்டி, ஓடைபட்டி, பூதிப்புரத்திற்கு இயக்கப்படும் டவுன் பஸ்சில் பணிபுரிகிறார். நாகலட்சுமி பெரியகுளத்தில் இருந்து ஜி.கல்லுபட்டி வழியாக வத்தலகுண்டு செல்லும் பஸ்சில் பணிபுரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை