உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண்சரிவில் இருவர் பலி: மூவர் மீது வழக்கு

மண்சரிவில் இருவர் பலி: மூவர் மீது வழக்கு

மூணாறு: தனியார் தங்கும் விடுதியில் கட்டுமான பணி இடையே மண் சரிவு ஏற்பட்டு இரு தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மூணாறு அருகே சித்திராபுரத்தில் தனியார் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்கு மண் அகற்றும் பணி நடந்தது. அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் பைசன்வாலியைச் சேர்ந்த பென்னி 49, ஆனச்சால் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் 40, ஆகியோர் பலியாகினர். வழக்கு பதிவு: அச்சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் ஷெரின்அனிலா ஜோசப், அவரது கணவர் ஷெபி, கட்டுமான பணி கண்காணிப்பாளர் ஜெய்சன் ஆகியோர் மீது வெள்ளத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விதிமுறை மீறல்: தங்கும் விடுதி கட்டப்பட்ட பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள சிவப்பு பட்டியலில் உட்பட்டதாகும். அங்கு வீடு கட்ட அனுமதி பெற்று, அதன் பெயரில் விதிமுறைகள் மீறி தங்கும் விடுதி கட்டப்பட்டதால் பணிகளை நிறுத்துமாறு வருவாய் துறையினர் கடந்த ஜனவரியில் நோட்டீஸ் அளித்தனர். அதன்பிறகும் பணிகள் நடந்ததால் தேளகுளம் சப் கலெக்டர் கட்டத்திற்கு சீல் வைத்தார். கட்டடத்தினுள் யாரும் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் 'கேட்' க்கும் சீல் வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்புடன் வருவாய் துறையினர் கட்டடங்களில் ஒட்டிய உத்தரவுகளில் திருத்தம் செய்து பணிகள் நடந்ததாக தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை