உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பழுதாகிய நின்ற பஸ் மீது-டூவீலர் மோதல்: கண்டக்டர் பலி

 பழுதாகிய நின்ற பஸ் மீது-டூவீலர் மோதல்: கண்டக்டர் பலி

தேனி: பெரியகுளம் அருகே ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சில் டூவீலர் மோதிய விபத்தில் மற்றொரு அரசு பஸ் கண்டக்டர் ராஜாங்கம் 54, உயிரிழந்தார். பெரியகுளம் சில்வார்பட்டி மேலத்தெரு அரசு பஸ் கண்டக்டர் ராஜாங்கம். பெரியகுளம் டெப்போவில் பணிபுரிகிறார். டிச.25 இரவுப் பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். எ.காமாட்சிபுரம் அருகே பொள்ளாச்சி டெப்போவை சேர்ந்த அரசு பஸ், பழுதாகி ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ராஜாங்கத்தின் டூவீலர் பழுதாகி நின்ற பஸ்சின் பின்பகுதியில் மோதி, விபத்து நடந்தது. அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஸ்சின் டிரைவர் கதிரேஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்