மேலும் செய்திகள்
டூவீலர் விபத்தில் வாலிபர் பலி
19-Sep-2024
பெரியகுளம் : பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் பெந்தகோஸ்தே சர்ச் தெருவைச் சேர்ந்த ராணுவவீரர் சையதுஜெயிலானி. இவரது மகன் சையதுமுகமது 15. வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதே வகுப்பு படிக்கும் தனது நண்பர் முகுந்தன் 15. இருவரும் பெரியகுளம் கல்லாற்றில் குளித்து விட்டு டூவீலரில் வீடு திரும்பினர்.டூவீலரை சையதுமுகமது ஓட்டியுள்ளார். கல்லாற்றிலிருந்து பெரியகுளம் செல்லும்போது ரோட்டோரம் மைல்கல்லில் டூவீலர் மோதியது. இதில் சையது முகமது சம்பவ இடத்திலேயே பலியானார்.காயமடைந்த முகுந்தன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.-
19-Sep-2024