உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உடையகுளம், செங்குளம் துர்வார வலியுறுத்தல்

உடையகுளம், செங்குளம் துர்வார வலியுறுத்தல்

சின்னமனூர் : முதல் போக சாகுபடி பணி துவங்கும் முன் உடைய குளம், செங்குளங்களை தூர்வார வேண்டும் என்று சின்னமனூர் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாக குழு கோரிக்கை விடுத்துள்ளது.சின்னமனூர் நன்செய் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.சங்க நிர்வாகிகளும், தண்ணீர் மேலாண்மை பணியாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் தலைவர் கூறுகையில், முதல் போக சாகுபடி பணிகள் துவங்கும் முன்பாக சின்னமனூர் உடைய குளம், செங் குளங்களை தூர் வார நீர்வளத்துறை முன்வர வேண்டும்.இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பு நிலைக்கு கீழ் இருக்கும் என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.எனவே கண்மாய்களில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். ஆனால் தூர்வாராததால் கண்மாய் மண் மேவி மேடாக உள்ளது.இதனால் முழு அளவில் தண்ணீர் நிரப்ப இயலாது. எனவே அரசு தூர்வார வேண்டும். இல்லையென்றால் விவசாய சங்கம் தூர் வார தயாராக உள்ளது.நீர்வளத்துறையின் மேற்பார்வையில் விவசாய சங்கம் தூர் வார அரசு அனுமதிக்க வேண்டும். இன்னமும் ஒரு மாதமே உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ