உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம்

பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம்

போடி, : போடி அருகே ராசிங்காபுரத்தில் ரூ.7.88 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது.போடி ஒன்றியம் ராசிங்காபுரம் ஊராட்சியில் 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். உப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் ஆகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒரு குடம் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு விநியோகம் செய்யும் வகையில், முத்தாலம்மன் கோயில் அருகே 5 ஆண்டுகளுக்கு முன், மத்திய நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.7.88 லட்சம் மதிப்பில் சோலார் சிஸ்டம் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. சில நாட்கள் மட்டும் செயல்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை