உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பி.சி.,பட்டியில் பயன் இல்லாத உயர் கோபுர மின் விளக்கு

பி.சி.,பட்டியில் பயன் இல்லாத உயர் கோபுர மின் விளக்கு

தேனி: பழனிசெட்டிபட்டியில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு பகுதியில் தேனி கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தில் இருந்து போடி விலக்கு வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த ரோட்டில் அதிக குடியிருப்புகள் உள்ளன. ஆனால், ரோட்டின் சென்டர் மீடியனில் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் ரோட்டை நடந்து கடந்து செல்வோர், டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பஸ் ஸ்டாப் எதிரே 10 ஆண்டுகளுக்கு முன் எம்.பி., நிதி ரூ.5 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், அதனை பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அவை பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் தெரு எதிரிலும் உயர்மின்விளக்கு கோபுரம் காட்சி பொருளாக உள்ளது. விபத்துக்களை தவிர்க்க சென்டர் மீடியன்களில் மின் விளக்குகள் பொருத்தவும், பயன்இல்லாத விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ