உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணை தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணை தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி:மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 12 ல் நடக்கிறது. இதனை முன்னிட்டு வைகை அணையில் திறக்கப்படும் நீர் முன்கூட்டியே மதுரை சென்று சேரும் வகையில் நேற்று மாலை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வளத்துறையினர் கூறியதாவது: சித்திரை திருவிழாவிற்காக நேற்று முதல் மே 12 வரை 216 மில்லியன் கன அடி நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களை கடந்து செல்ல இருப்பதால் அங்கு கரையோர பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அணை நீர்மட்டம் 55.27 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு 25 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் வழக்கம்போல் வெளியேறுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ