மேலும் செய்திகள்
விருதுநகரில் நாளை கடையடைப்பு
28-Nov-2024
தேனி: வணிக கட்டடங்களுக்கு வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெற கோரி நாளை மாவட்டத்தில் வியாபாரிகள், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம், மாவட்ட மொத்தம், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இச்சங்கங்களின்மாவட்டத் தலைவர்கள் ஆனந்தவேல், நடேசன் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, வணிக பயன்பாட்டில் உள்ள கட்டடங்களுக்கு செலுத்தப்படும் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானத்தால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால்மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நவ.29ல் ஒரு நாள் அடையாள முழுநேர கடையடைப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடையடைப்பில் மாவட்ட வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்கம், அரிசி வியாபாரிகள் சங்கம் இணைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பும் கூட்டத்தில் 18 சதவீத வரியை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்றி, இதனை கண்டித்து நவ.,29ல் கடையடைப்பு நடத்துகிறது.மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமனுக்கு இமெயில் மூலம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகஅமைச்சர் பதில் அளித்துள்ளார்.
28-Nov-2024