உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வயல்பட்டி வாய்க்கால்  துார்வாரும் பணி துவக்கம்

வயல்பட்டி வாய்க்கால்  துார்வாரும் பணி துவக்கம்

தேனி: கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து ஜூனில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, வீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் தடுப்பணை முதல் வயல்பட்டி வரை வரத்து வாய்க்கால் துார்வாரும் பணி துவங்கி உள்ளது.வீரபாண்டி அருகேயுள்ள வயல்பட்டி கண்மாய் மூலம் 412 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முதல் போக நெல் சாகுபடிக்கானதண்ணீர் திறப்பதற்குள், இக் கண்மாயின் நீர் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க விவசாயிகள் நீர்வளத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி வீரபாண்டி தடுப்பணையில் இருந்துவயல்பட்டி கண்மாய் வரை 3 கி.மீ., துாரத்தில் உள்ள நீர் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி நடந்தன. இப்பணிகள் பெரியாறு -வைகை வடிநில உத்தமபாளையம் உப கோட்டத்தின் உதவிப் பொறியாளர் பிரவீன் மேற்பார்வையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் வாய்க்கால் துார்வாரும் பணி நடக்கிறது.. ஓரிரு நாட்களில் பணிகள் நிறைவு பெறும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை